ஆப்நகரம்

மிதமான மழைக்கு இடிந்து விழுந்த அரசு கட்டிடம்.. இதற்கெல்லாம் காரணம் இவங்கதான்.. மன்னார்குடி விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெய்த மிதமான மழைக்கு 5 ஆண்டுகளுக்கு முன் லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட அரசு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 Dec 2022, 11:17 am

ஹைலைட்ஸ்:

  • 5 ஆண்டுகளுக்கு முன் 25 லட்சம் செலவு கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கட்டிடம்
  • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெய்த மிதமான மழைக்கு இடிந்து விழுந்த சம்பவம்
  • ஊழல் செய்து‌ முறையாக கட்டப்படாததால் கட்டிடம் மழைக்கு இருந்து விழுந்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil இடிந்து விழுந்த நுகர்பொருள் வாணிபக் கழக கட்டிடம்
இடிந்து விழுந்த நுகர்பொருள் வாணிபக் கழக கட்டிடம்
மன்னார்குடி அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக கட்டிடம் சில மணி நேரம் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. என்னதான் அரசு விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் நல்லது செய்ய நினைத்தாலும், இடையில் உள்ள சில அரசு அதிகாரிகள் அதிலும் முறைகேடு செய்து, லஞ்சம் பெற்றுக்கொண்டு பணிகளை முறையாக நடக்க அனுமதிப்பதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக சிறிது பெய்யும் மழைக்கும், இயற்கை பேரிடர்களுக்கும் தாக்கு பிடிக்காத பாலங்கள், அரசின் இலவச வீடுகள், சாலைகள் ஆகியவையே.

அவ்வகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, நத்தம் , முன்னவால்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் விவசாயிகளது நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது.

இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் அரசின் விதிமுறைகளை மீறி மண்ணால் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில்‌ நேற்று காலை முதல் மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மிதமான மழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாமல் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக கட்டிடம் இடிந்து விழுந்தது.

பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் கட்டுமான பணியில் அப்போதைய அரசு அதிகாரிகள் பெரும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதன் விளைவு தான் சிறு மழைக்கு கூட தாக்கு பிடிக்க‌‌ முடியாமல் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும், இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகையில் விடிய விடிய பெய்த மழை.. இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை.. குழந்தையுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்!

மேலும் இந்த நேரடி நெல்கொள்முதல் நிலைய கட்டிடப்பகுதியில் அரசு ஊழியர்கள், விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என‌ ஏராளமானோர் தினசரி வந்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் இக்கட்டிடம் பூட்டி கிடந்த நிலையில் அதிஷ்டவசமாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி