ஆப்நகரம்

முக்கிய புள்ளி குடைச்சல்.. நீடாமங்கலம் திமுக ஒன்றிய செயலாளர் தேர்வில் குளறுபடி.. 200 பேர் ராஜினாமா செய்ய முடிவு!

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்வில், மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தலையீட்டால் குளறுபடி ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 13 Aug 2022, 12:27 pm

ஹைலைட்ஸ்:

  • நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்வு
  • மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தலையீட்டால் குளறுபடி
  • திமுகவை சேர்ந்த நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ய முடிவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 200 பேர் ராஜினாமா செய்ய முடிவு
திமுக உட்கட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவின் ஆதரவாளரான ஆனந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஆனால் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் வாக்களிக்க தகுதியுள்ள மொத்தம் 280 திமுக பொறுப்பாளர்களில் அண்ணாதுரை என்பவருக்கு 216 பேர் ஆதரவு இருந்த நிலையில் மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பரிந்துரையின் பேரில் ஆனந்த் என்பவரை நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக அறிவித்துள்ளது.

கோவில் வளாகத்தில் அரசு பள்ளி.. ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதி.. கவனிப்பாரா முதல்வர்?

திமுகவை அழிக்கும் நடவடிக்கைகளில் மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் திமுகவின் தலைமைக்கு எதிராக நடந்த இக்கூட்டத்தில் திமுக தலைமை ஆனந்த் அறிவிப்பினை திரும்ப பெறாவிடில் அண்ணாதுரை ஆதரவாளர்களான நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 3 பேர் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் 6 பேர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 1 பேர் ஒன்றிய பிரதிநிதி , கிளைகழக செயலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை நாளை மறுநாள் மறைந்த தமிழக முதல்வர் தலைவர் மு. கருணாநிதியின் தாயார் சமாதி அமைந்துள்ள திருவாரூரை அடுத்துள்ள காட்டூருக்கு சென்று ராஜினாமா செய்யப் போவதாக கூட்டாக சேர்ந்து அறிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி