ஆப்நகரம்

வைரஸ் பரவலை தடுக்க நாய்களுக்கு தடுப்பூசி முகாம்!

திருவாரூர் மாவட்ட கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Samayam Tamil 28 Sep 2021, 5:58 pm
வீட்டிற்கு காவலனாய், செல்ல பிராணியாய் விளங்கும் நாய்கள், சில நேரங்களில் நோய் ஆபத்துகளையும்கூட வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது. அப்படி நாய்கள் கொண்டுவரும் சூழலுள்ள முக்கியமான ஒரு பாதிப்பு, ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடியால் ஏற்படும் வைரஸ் பாதிப்பு.
Samayam Tamil திருவாரூர்


இந்த ரேபிஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு முடக்க நினைக்கிறது…மாஜி அமைச்சர் காமராஜ் பாய்ச்சல்!
இதனிடையே, வெறிநாய்கடி பாதிப்பை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை, மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இன்று நாய்களுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மண்டல உதவி ஆளுநர் ராமதுரை, கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் விஜயகுமார், மண்டல இணை இயக்குனர் தனபாலன் மற்றும் காலை நடை மருத்துவமனை ஊழியர்கள் , ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி