ஆப்நகரம்

சாத்தான்குளம் மர்மம்: குற்றவியல் நடுவர், மருத்துவர், போலீசார் மீது கொலை வழக்கு பதிய போராட்டம்...

கோவில்பட்டி சிறையில் நிகழ்ந்த இரண்டு உயிரிழப்பில் மர்மம் நீடித்து வரும் நிலையில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.

Samayam Tamil 24 Jun 2020, 5:27 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சில கேள்விகளையும் முன்னிறுத்தி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil வழக்கறிஞர்கள் போராட்டம்


சாத்தான்குளத்தில் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறை சாலையில் மரணம் அடைந்ததற்கு போலீசாரின் தாக்குதலே காரணம் என்று கூறப்பட்ட சம்பவத்தையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த வழக்கில் சிறைச்சாலையில் அடைப்பதற்கு முன்பு போலி சான்றிதழ் கொடுத்ததாக மருத்துவர், விசாரணை செய்யாமல் சிறைச்சாலைக்கு அனுப்பிய குற்றவியல் நடுவர், சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் நடந்தது.

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த 198 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை...

இந்த பிரச்சனைக்கு தீர்வு வரவில்லையென்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது எனவும் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி