ஆப்நகரம்

சாத்தான்குளம் மரண சம்பவம்...மீண்டு்ம் வேகமெடுக்கும் சிபிசிஐடி விசாரணை!

சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு கட்டட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரண்டாம் கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர்.

Samayam Tamil 2 Jul 2021, 9:04 am
தூத்துக்குடி மாவட்டம், பேய்குளம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். கட்டட தொழிலாளிலான இவரை கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட போலீசார் அவரது வீட்டிலிருந்து கூட்டிச்சென்று காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
Samayam Tamil சாத்தான்குளம் மரண சம்பவம்
சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலுக்கு பிறகு கட்டட தொழிலாளி மரணடைந்த சம்பலம் தொடர்பாக சிபிடிஐடி போலீசார் விசாரணை தொடக்கம்


இந்த தாக்குதலுக்கு பிறகு கடந்த 2020 ஜூன் 13ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்

இதையடுத்து மகேந்திரன் தாயார் வடிவு, மகேந்திரனை கொலை செய்த காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ஸ்டாலினுக்கும், விஜயகாந்துக்கும் நட்புறவு எப்பயும் இருக்கு... பிரேமலதா மதுரையில் புது தொடக்கம்?

இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் போலீஸ் நண்பர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மதுரை மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் மகேந்திரன் வழக்கு தொடர்பாக அவரது தங்கை சந்தனமாரி மற்றும் காவல் நிலையத்தில் மகேந்திரன் தாக்கப்பட்டபோது உடனிருந்த யாக்கோபு, காளி, உள்ளிட்டோரிடம் மதுரை மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி