ஆப்நகரம்

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா டபுளான சிக்கன் விலை... அசைவ பிரியர்கள் அதிர்ச்சி!

இறைச்சிக் கோழியின் விலை திடீரென்று 150 ரூபாயிலிருந்து 270 ரூபாயாக உயர்ந்துள்ளதால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 25 Jul 2021, 10:11 pm

ஹைலைட்ஸ்:

  • இரட்டிப்பான சிக்கன் விலை.
  • தூத்துக்குடியில் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி.
  • கிலோ 150 இல் இருந்து 270 ஆக அதிகரிப்பு.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சிக்கன் விலை
தூத்துக்குடியில் இரட்டிப்பான சிக்கன் விலை
பொதுவாக கார்த்திகை மற்றும் ஆடி மாதங்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பது பொதுமக்களின் வழக்கம். இதனால் இந்த மாதங்களில் ஆடு மற்றும் கோழிகளின் விலை குறைவாகவே இருக்கும்.
ஆனால் தூத்துக்குடியில் இறைச்சிக் கோழியின் விலை திடீரென்று 150 லிருந்து 270 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது. இது அசைவப் பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தியை குறைத்து கோழியின் விலையை அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி