ஆப்நகரம்

கே.எஸ்.அழகிரியை கண்டித்து ராஜினாமா: மாவட்ட தலைவர் முடிவு!

கே.எஸ்.அழகிரியின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 18 Nov 2022, 3:54 pm
கட்சிப் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும் , மாநிலத் தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு மாநிலத் தலைவர் ஒரு கண்டன அறிக்கை கூட கொடுக்காததாலும் தனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil kovilpatti congress


காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருப்பவர் காமராஜ். அவர் இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் போடப்பட்டுள்ளன. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 15ந்தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.
ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பு: பாஜக முடிவு என்ன? நயினார் நாகேந்திரன் சொன்னது இதுதான்!
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார். கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது.

எடப்பாடி போட்ட பக்கா பிளான்: இதை யாரும் கவனிக்கவே இல்லையே!

எனவே காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் தான் தொடர விரும்பவில்லை. தனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி