ஆப்நகரம்

மாஸ்க் போடாமல் வந்தால் கொரோனா பரிசோதனை, தூத்துக்குடியில் கொரோனா உச்சத்தால் அதிரடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை காரணமாக தொற்று அபாயம் தீவிரமெடுத்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பரிசோதனை செய்வதில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

Samayam Tamil 4 May 2021, 6:23 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் இருமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மாநகராட்சி அதிகாரிகள் காய்கறி சந்தை பகுதியில் வியாபாரிகளுக்கு திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.
Samayam Tamil மாஸ்க் போடாமல் வந்தால் கொரோனா பரிசோதனை, தூத்துக்குடியில் கொரோனா உச்சத்தால் அதிரடி!


தூத்துக்குடியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 722 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இரு மடங்காக அதிகரித்ததன் காரணமாகவே மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.. கனிமொழி உறுதி!

குறிப்பாகத் தூத்துக்குடி வஉசி சந்தை பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு திடீர் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது, அந்தப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அடுத்த செய்தி