ஆப்நகரம்

தசரா விழாவில் ரெக்கார்ட் டான்ஸ் ஆட தடை...தூத்துக்குடி கலெக்டர் ஆர்டர்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில், கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்த தடை விதித்த மாவட்ட ஆட்சியருக்கு தசரா நிர்வாக கமிட்டியினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Samayam Tamil 29 Sep 2021, 8:36 am

ஹைலைட்ஸ்:

  • தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
  • இந்த விழாவில் ஆபாச நடனம் ஆட கலெக்டர் தடை.
  • தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு விழா குழுவினர் நன்றி.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் விரதம் இருந்து பல்வேறு வேடம் அணிந்து தசரா குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு வரும் 6 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பல்வேறு தடைகள் விதிக்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் தசரா விழாவில் ஆபாச நடனம் நடத்த இந்த ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல் தமிழ் அச்சகம் உருவான ஊர் அடையாளமின்றி அழியும் சோகம்: தூத்துக்கு மக்கள் வேதனை!

இதைத்தொடர்ந்து தசரா திருவிழாவில் வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியதற்கும், ஆபாச நடனத்திற்கு தடைவிதிக்கப்பட்டதற்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், குலசேகரப்பட்டினம் தசரா கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.

அடுத்த செய்தி