ஆப்நகரம்

போதை பொருட்கள் விற்றால் இது தான் தண்டனை: வாத்தி ரெய்டு விட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் பகுதியில் தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ய 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து சீல் வைத்தனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 11 May 2022, 5:11 pm

ஹைலைட்ஸ்:

  • தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை
  • 3 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எஸ்.பி. பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆகியோர் அறிவுறுத்தலின் படி காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில்போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் எட்டயபுரம் காவல் நிலை எல்லைக்குட்பட்ட இளம்புவனம் நகரில் உள்ள ஒரு சில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' - மூதாட்டியிடம் நகை பறிப்பு..
வந்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்திய போது, கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் காவல் நிலை எல்லைக்குட்பட்ட இளம்புவனம் மேல செய்த்தலையை சேர்ந்த செல்வம், மீனாட்சிபுரத்தினை சேர்ந்த மைக்கேல்ராஜ், மேலநம்பியாபுரத்தினை சேர்ந்த அஜித்குமார் ஆகிய மூவரும் அரசினால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது உறுதியானது.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி 3 பேரிடம் இருந்து 17 மூட்டைகளில் சுமார் 1லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் மூவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சீல் வைத்தனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி