ஆப்நகரம்

போலி கருப்பு வைரம் விற்பனை..இருவர் கைது

தூத்துக்குடியில் போலி கருப்பு வைரத்தை விற்க முயன்ற பெங்களூர், ஓசூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 12 Feb 2021, 10:20 am
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் வைர கற்கள் விற்பனை செய்வதாக தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தெம்பாக காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Samayam Tamil போலி வைரம் | இருவர் கைது


அப்போது தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் இரண்டு பேர் போலி வைரக்கற்கள் விற்க முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வைர கற்களுக்கான சான்றுகளுடன் கருப்பு வைரம் வைத்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களை தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியபோது பெங்களூரை சேர்ந்த ஆனந்தா, ஓசூரை சேர்ந்த வெங்கடேஷ் பாபு என்பது தெரியவந்தது இவர்கள் கருப்பு வைரம் என நகை வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் விற்க முயன்றது தெரியவந்தது. மேலும் போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா சாவுக்கு காரணம் திமுகதான்: அமைச்சர் பகீர்

தூத்துக்குடியில் நகைக் கடை அதிபர்களிடம் கருப்பு வைரம் என 27 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற போது அவர்கள் சோதனை செய்ததில் போலி என்பது தெரிந்ததை தொடர்ந்தே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இவர்கள் வேறு எங்கும் போலி வைரக்கற்கள் விற்பனை செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

அடுத்த செய்தி