ஆப்நகரம்

ஒருத்தர் கூட விடுபடக் கூடாது... அனைவருக்கும் இழப்பீடு

​​மேலும் விவசாயிகளிடம் வங்கி எண் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து கணினியில் ஏற்றி சென்னைக்கு அனுப்ப வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

Samayam Tamil 21 Jan 2021, 6:46 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயியும் விடுபடாமல் அனைத்து விவசாயிகளையும் கணக்கெடுக்கும் பணி உத்தரவிடப்பட்டு உள்ளது விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என வேளாண் துறை இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி தெரிவித்தார்
Samayam Tamil farming


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பயிரிடப்பட்டுள்ள பாசி, உளுந்து, மக்காச்சோளம், சோளம், கம்பு, மற்றும் நெல் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது விவசாயிகள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களை ஆய்வு செய்வதற்காக தமிழக வேளாண் இயக்குனர் தட்சணாமூர்த்தி தூத்துக்குடி வருகை தந்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நெல்லை கலெக்டருக்கு ஒரு வாரம் டைம் கொடுத்துள்ள திமுக எம்எல்ஏ!... எதுக்கு தெரியுமா?

அப்போது மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் இயக்குனரிடம் காண்பித்து விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து ஆட்சியரின் அறிவுரைப்படி கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகளுடன் வந்து உள்ளதாக தெரிவித்தார் மேலும் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயிகளும் விடுபட்டு விடக்கூடாது அனைத்து விவசாயிகளையும் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விவசாயிகளிடம் வங்கி எண் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து கணினியில் ஏற்றி சென்னைக்கு அனுப்ப வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். முழுமையான கணக்கெடுக்கும் பணி முடிந்தவுடன் தமிழகஅரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி