ஆப்நகரம்

மீன் பிடிக்க அனுமதி! இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி மீனவர்கள்...

தூத்துக்குடியில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க 140 விசைப்படகுகளுக்கு அனுமதி

Samayam Tamil 30 May 2020, 9:42 pm
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட்டிருந்த தடைகாலம் முடியும் முன்னெரே வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மீனவர்கள் தங்கள் விசைபடகுகளை பழுது பார்த்து தயார் படுத்தியுள்ளனர்.
Samayam Tamil தூத்துக்குடி மீனவர்கள்


அதனையடுத்து விசைப்படகுகளை கடலில் மீனவர்கள் வெள்ளோட்டம் நடத்தினர். ஒவ்வொறு ஆண்டும் மீன் குஞ்சுகளின் இனபெருக்கத்தினை கருத்தில் கொண்டு விசைபடகுகள் மூலம் மீன் பிடிக்க ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எபரல் 15க்கு ஒரு மாத காலம் முன்னரே விசைபடகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்துவந்தனர். இப்போது அரசு தடைகாலத்தினை தளர்த்தி, வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீன் பிடிக்க செல்ல அனுமதி அளித்துள்ளது.

உலகத்தை விட்டே கொரோனாவை விரட்ட விபரீத பூஜை..! தூத்துக்குடி சாமியாரின் பகீர்

இதனால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து தயார் படுத்தி தற்போது வெள்ளோட்டம் செய்து வருகின்றனர். மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு துறைமுகத்தை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் உள்ள 240 விசைப்படகில் 140 விசைப்படகுகள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு வாரத்துக்கு மூன்று நாட்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி கொடுத்துள்ளனர்.

மேலும் மீன்களை ஏலம் விடும் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மாஸ்க் அணிய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அடுத்த செய்தி