ஆப்நகரம்

தமிழகத்தில் நீங்க ஒரு ஆணியும் புடுங்க முடியாது: பாஜகவை வறுத்தெடுத்த கீதா ஜீவன்

பாஜகவால் தமிழகத்தில் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது என்று அமைச்சர் கீதா ஜீவன் பேசியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 17 Dec 2022, 8:12 am
தமிழகத்தில் நீங்க (பாஜக) ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஒரு அணுவையும் அசைக்க முடியாது. தொண்டர்கள் அலர்ட்டா இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் 40க்கு 40 இடங்களை பெறும் என்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியுள்ளார்.
Samayam Tamil geetha jeevan


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். இதில் தமிழக சமூகநலன் ,மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “நீதிக்கட்சி காலத்தில் இருந்து நமது உரிமையை பெற்றுள்ளோம், கல்வி கற்கும் நிலை, சமமாக இருக்கையில் இருக்கும் நிலை, வேலை வாய்ப்பு கிடைக்கிறது, எங்கேயும் அடக்கு முறை இல்லை, இந்த நிலையை உருவாக்கியது திராவிட மாடல்,

சனாதனம் என்னவென்று தெரியாமல் பலர் பேசி வருகின்றனர். நான்கு பிரிவுகளாக மக்கள் இருக்க வேண்டும், நீங்கள் அடிமையாக தான் இருக்க வேண்டும். இதைத்தான் சனாதனம் என்கின்றனர்.
முதல்வர் அண்ணன் அவர்களே.. உருகும் அதிமுக எம்.எல்.ஏ - பதறும் எடப்பாடி
உலகம் முழுவதும் பறந்து இருக்கும் இவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதே , மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி தர வேண்டும். தமிழகத்திற்கு குறைவான நிதி போதும் என்று ஒன்றிய அரசு அவ்வளவு நெருக்கடி தருகிறது. அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் இன்று வரை வரவில்லை. மற்ற மாநிலங்களில் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் முடிவு பெற்று விட்டது. இதுவரை இருந்த எதிரிகள் வேறு மாதிரி இருந்தார்கள். ஆனால் இப்போது இருப்பவர்கள் நம்மை எவ்வளவு இழிவாக பேச முடியுமோ அவ்வளவு தூரம் பேசுகின்றனர். அறவே நம்மை ஒடுக்கிட வேண்டும் என்று மிரட்டுகின்றனர். ஆனால் அவர்கள் இன்றைக்கு அரசியலுக்கு வந்தவர்கள்.‌ அரசியல் என்னவென்று தெரியாது. மக்களின் வாழ்வாதாரம் தெரியாது. இதுவரை தமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களுக்காக இருந்தனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் தான் இதையும் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தால் தான் வேண்டாதவர்கள் எல்லாம் இன்று ஆட்டம் போடுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக் காலத்தில் தனது கஜானாவை நிரப்புவதை மட்டும் கவனமாக கொண்டிருந்தார். மற்ற எதையும் செய்யவில்லை. மக்களைக் கவனிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் மந்திரிகள் தங்களது வீட்டு கஜானாவை நிரப்பினார்கள். ஆகையால் அவர்கள் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் வாக்குறுதயை திமுக அரசு நிறைவேற்றும். மகளிருக்கான ரூ 1000 உரிமைத் தொகை நிச்சயமாக கொடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

பாஜகவிற்கு அவர்களுடைய கொள்கை, கோட்பாடு தெரியாது. மகாகவி பாரதியார், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் தமிழகத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி. ஆனால் வட இந்தியாவில் ஆதி திராவிடர்களுக்கு இன்றும் கல்வி மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. அணுவையும் அசைக்க முடியாது.
மோடியை புகழ்ந்து தள்ளிய திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்... மாறுகிறதா கூட்டணிக் கணக்கு?
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 திமுக கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது. அவர்கள் என்ன ஆட்டம் ஆடினாலும் தொண்டர்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள எம்பிக்களுக்கு தொகுதிக்கான நிதியை வழங்கவில்லை. குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்கள் பொதுமக்கள் அதற்கு வழி விட்டு விடக்கூடாது” என்றார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி