ஆப்நகரம்

இடுப்பில் கிடந்த துண்டை தோளில் போட வைத்தது திராவிட இயக்கம்: அனல் கிளப்பிய அமைச்சர் கீதா ஜீவன்!

இடுப்பில் துண்டை கட்டாதே அதைத் தோளில் போடு என்று அண்ணா கூறியதைத் தான் திமுக செய்தது சுயமரியாதையை உணர்வை ஊட்டுவதற்கு தான் இந்த வழக்கம் என தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 26 Jun 2022, 9:02 pm

ஹைலைட்ஸ்:

  • துண்டை தோளில் போட வைத்தது திராவிட இயக்கம்
  • அனல் கிளப்பிய அமைச்சர் கீதா ஜீவன்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி மகளிர் - மாணவர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக நலன் துறை அமைச்சர் கீதா ஜீவன், தன்னம்பிக்கு பேச்சாளர் பர்வீன் சுல்தானா, மாநில செய்தி தொடர்பு இணை செயலாளார் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன்,

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நம்மிடம் சாதி,மத வேறுபாடு இருக்க கூடாது நாம் எல்லோரும் தமிழர்கள், நாம எல்லாம் தமிழர்கள் என்று ஒன்று பட வேண்டும் என்பதை தான் திமுக வலியுறுத்தி வருகிறது. ஒரு இனத்தினை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்தியாவில் இருந்த நிறைய மொழிகள் தற்போது இல்லை, வெறுமன புத்தகத்தில் இருக்கிறது. யாரும் பேசுவதில்லை. ஆனால் தமிழ் மொழி பாதுகாக்கப்பட்டு செம்மொழியாக மாற்றியதில் திராவிட தலைவர்களுக்கு பெரிய பங்கு உண்டு.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பழுதாகி கிடக்கும் லிப்ட்: பொதுமக்கள் வேதனை!
தமிழ் மொழி நமது தாய் மொழி என்கிற உணர்வு வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. எல்லோருக்கும் இட ஓதுக்கீடு வழங்கியது திமுக, பொருளாதார முறையில் எம்.ஜீ.ஆர் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை திமுக எதிர்த்தது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூகநீதியை கொண்டு வந்தது திமுக என்றும், திமுக கூட்டத்தில் ஏன் துண்டு போடுகிறார்கள் என கேலி செய்த பா.ஜ.கவினருக்கு கூறிக் கொள்கிறேன், இடுப்பில் துண்டை கட்டாதே அதைத் தோளில் போடு என்று அண்ணா கூறியதைத் தான் திமுக செய்தது சுயமரியாதையை உணர்வை ஊட்டுவதற்கு தான் இந்த வழக்கம் என்று பேசினார்..
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி