ஆப்நகரம்

தூத்துக்குடி திரும்பியுள்ள தொழிலாளர்கள் எத்தனை பேர்? - அமைச்சர் தகவல்!!

பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏழாயிரம் பேர், தங்களின் சொந்த மாவட்டமாக தூத்துக்குடிக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 May 2020, 12:07 am
தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருவி வசதியைமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Samayam Tamil minister


இந்த நிகழ்ச்சியில், தமிழக செய்தி -விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு ஸ்கேன் கருவி இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 6,724 பேருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 27 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிசோதனை செய்யாமலேயே கொரோனா இல்லைன்னு சொல்ல சொன்ன டீன் பணியிட மாற்றம்!

தற்போது அரசு அறிவித்துள்ள தளர்வின்கீழ் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து நபர்கள் வருகின்றனர். இதில் சிலர் முறையான அனுமதியின்றி வெளிமாநிலங்களிலிருந்து தூத்துக்குடி வருகின்றனர்.

அந்த வகையில் கண்டுபிடிக்கப்பட்ட நபர்களுக்கு கொரோனா சோதனை செய்ததில், இரண்டாவது கட்டமாக 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இளம்புவனம், மழவராயநத்தம், சேரகுளம், ஆதனூர் உள்ளிட்ட நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உதவிகள் செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ் நகர், மடத்தூர், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலா ரூ.13 லட்சம் செலவில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோயம்பேட்டிலிருந்து தூத்துக்குடி வந்தவருக்கு கொரோனா உறுதி!

இதன் மூலம் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ல குழந்தையின் வளர்ச்சிகளை கணக்கிட்டு அதற்கு ஏற்றார்போல் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 8,700 புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் 4 ஆயிரத்து 107 பேர் தங்களது சொந்த ஊர் செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவரை 460 நபர்களை அவரவர் சொந்த மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட்டுக்கு சிறப்பு ரயில் மூலம் மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

வெளிமாநிலங்களில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் சொந்த மாவட்டமான தூத்துக்குடிக்கு திரும்பி வந்துள்ளனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அடுத்த செய்தி