ஆப்நகரம்

மகனை திருநங்கையாக மாற்ற முயற்சி...பெற்றோர் புகாரை கண்டுக்காத போலீஸ்!

பிளஸ் 1 மாணவனை கடத்திச் சென்று திருநங்கையாக மாற்ற முயற்சிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Samayam Tamil 21 Jul 2021, 8:32 am

ஹைலைட்ஸ்:

  • கோவில்பட்டியை சேர்ந்த பிளஸ் 1 மாணவன் கடந்த ஒன்றரை மாதமாக காணவில்லை.
  • போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.
  • தூ்த்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர், உற்றார் மனு.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மகனை திருநங்கையாக மாற்ற முயற்சிப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூரணம்மாள் காலனியை சேர்ந்த ஒரு மாணவர் கடந்த ஒன்றரை மாதங்களாக காணவில்லை.
இதுசம்பந்தமாக உறவினர்கள் விசாரணை செய்ததில் மாணவனை ஒரு கும்பல் கடத்திச் சென்று, அவருக்கு மாத்திரைகள் கொடுத்து திருநங்கையாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், கோவில்பட்டி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் மாணவனை மீட்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

6 கி.மீ. தொலைவை ஒரு மணி நேரத்தில் கடந்து தூத்துக்குடி சிறுமி சாதனை!

போலீசாரின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து மாணவனின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். .

அடுத்த செய்தி