ஆப்நகரம்

தென் மாவட்டங்களில் முதல் முறையாக... கலக்கும் அரசு மருத்துவமனை

இதன் மூலம் மூளை கட்டி, அனைத்து வகைப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

Samayam Tamil 11 Nov 2020, 7:52 pm
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு, 16 கோடி மதிப்பிலான கருவியினை வழங்கி முதல்வார் எடப்பாடி பழனிசாமி சேவையைத் துவக்கி வைத்தார்
Samayam Tamil கதிர்வீச்சு சிகிச்சை


தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த வந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதலாவதாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு 16-கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ நேரியல் முடுக்கி கருவியினை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 71-61-லட்சம் மதிப்பிலான மத்திய ஆய்வக புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார். தென் மாவட்டத்தில் முதல் முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தான் அதிக சக்தி வாய்ந்த எக்ஸ் கதிர்களை உருவாக்கும் திறன் கொண்ட எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

பிரதமர் மோடிக்கு ஏன் கொரோனா பாதிப்பே வரல? எப்படி பாதுகாப்பா இருக்கார் தெரியுமா?


இதன் மூலம் மூளை கட்டி புற்றுநோய் வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் மார்பக புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் உணவுக்குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் வாய் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி