ஆப்நகரம்

2 பெண்களை டாய்லெட்டில் அடைத்து சித்திரவதை செய்தவருக்கு திருச்சி திருடனுக்கு 5 ஆண்டு சிறை!

திருச்சி மாவட்டத்தில் கத்தியை காட்டி நகை பறித்த வாலிபர் 5 ஆண்டு தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.

Samayam Tamil 14 Oct 2021, 4:03 pm
கடந்த 2014ஆம் ஆண்டு திருச்சி உறையூர் பகுதியில் உள்ள நாச்சியார் பாளையம் பகுதியில் செயல்படும் காமராஜர் கல்வி கூடத்தில் பணிபுரியும் காயத்ரி மற்றும் அவரது உதவியாளர் தூயமலர்மார்டினா என்கிற இரண்டு பேர் கல்வி கூடத்திற்குள் இருந்தனர்.
Samayam Tamil 2 பெண்களை டாய்லெட்டில் அடைத்து சித்திரவதை செய்தவருக்கு திருச்சி திருடனுக்கு 5 ஆண்டு சிறை!


அப்போது திடீரென அங்கு புகுந்த ஒரு மர்ம நபர் இரண்டு பேரிடமும் கத்தியை காட்டி மிரட்டி காயத்ரி அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் வளையல்களை பறித்துள்ளார்.

தொடர்ந்து மற்றொரு நபரான தூயமலரிடம் மார்டினாவிடம் 2 பவுன் தங்க சங்கிலி என இரண்டு பேரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு கழிவறையில் வைத்து பூட்டி விட்டு தப்பி ஓடினார்.

பின்னர் இருவரும் கழிவிலிருந்து சத்தம் கொடுத்துள்ளனர். இதையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு உள்ளனர்.

வீட்டில் சிறையில் அய்யாக்கண்ணு: 2ஆம் நாள் உண்ணாவிரத போராட்டம் கோமத்துடன் விவசாயிகள்!
இது குறித்து காயத்ரி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்த உறையூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கத்தியை காட்டி நகைகளை பறித்து சென்ற திருச்சி கேகே நகர் தேவராயர் நகரைச் சேர்ந்த லியோ என்கிற ரொனால்டு ரோஸ்லியோ(39) என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த லியோ (எ) ரொனால்டு ரோஸ் லியோ என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதனை அடுத்து லியோ திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி