ஆப்நகரம்

நடந்து சென்றபோது கிணற்றில் விழுந்த மூதாட்டியை வீரர்கள் உள்ளிறங்கித் தூக்கினார்!

கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரின் செயல் மாவட்ட மக்களிடையே பெரும் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது...

Samayam Tamil 8 Mar 2021, 12:20 pm
திருச்சி டோல்கேட் திருவள்ளுவர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சீதாலட்சுமி. வயது 80. கணவர் நடராஜன் இறந்த பின் சீதாலட்சுமி மகன் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
Samayam Tamil நடந்து சென்றபோது கிணற்றில் விழுந்த மூதாட்டியை வீரர்கள் உள்ளிறங்கித் தூக்கினார்!


இந்த சூழலில் அதிகாலை வீட்டின் அருகில் உள்ள 20 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகிலிருந்த சுற்றுச் சுவரைப் பிடித்தபடி நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் கால் இடறி அந்த மூதாட்டி கிணற்றிற்குள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருணாகரன் தலைமையிலான நிலைய வீரர்கள், சென்று கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை மீட்டனர்.

ஒரு வாரத்தில் கோவை, மதுரையில் 2 ஆயிரம் கிராம் தங்கம் கடத்தல்!

கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள் 80வயது பாட்டியை உயிருடன் மீட்டனர். இதனைத் தொடர்ந்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு மூதாட்டியும், அப்பகுதி மக்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

அடுத்த செய்தி