ஆப்நகரம்

மவுத்ஆர்கன் வாசித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானைகள்; கண்டு ரசித்த பக்தர்கள்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி இணைந்து மவுத்ஆர்கன் வாசித்ததை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Sep 2022, 5:07 pm

ஹைலைட்ஸ்:

  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம்
  • கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி இணைந்து மவுத்ஆர்கன் வாசித்தது
  • கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி இணைந்து மவுத்ஆர்கன் வாசித்ததை பக்தர்கள் கண்டு ரசித்தனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மவுத்ஆர்கன் வாசித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானைகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 26-ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார்.
2ம் திருநாள் முதல் 6ம் திருநாளான 27, 28, 29, 30, 1-ந் தேதி மற்றும் 8ம் திருநாளான 3-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாளான 2ந் தேதி அன்று ஆண்டு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது.


இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு யானை ஆண்டாள் நொண்டியடித்தபடி மவுத்ஆர்கன் வாசிக்கும் நிகழ்ச்சி கடந்த ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கத்தில் இருந்தது. யானை துன்புறுத்தப்படுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் நொண்டியடிக்கும் முறை கைவிடப்படடது. மவுத்ஆர்கன் வாசிக்கும் முறை மட்டும் நடைமுறையில் உள்ளது. கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு கொலுசுகள் அணிவிக்கப்பட்டிருந்தன.

முதல்வரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார் - அதிமுக அவைத் தலைவர்

தாயாருக்கு யானைகள் ஆண்டாள் லெட்சுமி இணைந்து சாமரம் வீசி மவுத்ஆர்கன் வாசித்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர். இதை பக்தர்கள் செல்போன்களில் வீடியோ, படம் எடுத்தனர். விழாவின் 9ம் நாளான 4-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி