ஆப்நகரம்

சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் திருச்சியில் விரதத்தை முடிக்க திட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்துக்கு ஆன் -லைன் டிக்கெட் கிடைக்கப் பெறாத தமிழக பக்தர்கள், திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் தங்களது விரதத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Samayam Tamil 16 Nov 2020, 1:06 pm
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மகரஜோதி பூஜைக்காக ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
Samayam Tamil திருச்சி ஐயப்பன் கோயில்
ஐயப்பன் கோயில்-திருச்சி


நடை திறக்கப்பட்டாலும் பம்பை ஆற்றில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரத்தில் 5 நாட்களுக்கு நாள் ஓன்றுக்கு 1,000 பக்தர்களுக்கும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களில் தலா 2,000 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதேபோன்று மண்டல, மகரவிளக்கு நாட்களில் 5,000 பக்தர்களும் அதுவும் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்படுவர் என்று சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

திருச்சி உத்தமர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு யாகங்கள்

மேலும், கொரோனா தொற்று இல்லை என்பதை 24 மணி நேரத்துக்கு முன்பாக உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழுடன் பக்தர்கள் வர வேண்டியது அவசியம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது, படி பூஜை வரை பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன் புக்கிங் அனைத்தும் முடிந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியாத ஐயப்ப பக்தர்கள் நாளை முதல் மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர்.

மலைக்க வைக்கும் திருச்சி மலைக்கோட்டை வரலாறு!

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு போக முடியாவிட்டாலும், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று கார்த்திகை மாத விரதத்தை முடிக்க தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி