ஆப்நகரம்

கொரோனா போச்சு...டெங்கு வரும் அபாயம்... பீதியில் பீமநகர மக்கள்!

பீமநகர் அருகே கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குப்பை அகற்றப்படாமல் உள்ளதால் பீமநகர் பகுதியில் தொற்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jun 2021, 2:02 pm

ஹைலைட்ஸ்:

  • திருச்சி பீமநகர் பகுதியில் பத்து நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது.
  • இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
  • கொரோனா சற்று குறைந்துள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பீம நகர், திருச்சி
திருச்சி, பீம நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை 47 வது வார்டு கன்னிமார் கோவில் தெருவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சாலையில் குப்பை அகற்றப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

அப்பகுதியில் வலம்வரம் மாடுகள், நாய்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் தங்களின் உணவுகளைத் தேடி இந்த குப்பைகளை கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் பரவி, மூச்சுதிணறல் ஏற்படும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருச்சி இரண்டாவது தலைநகர்... சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்த குரல்!

குப்பையுடன் கலந்து தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

இந்த ஆபத்துகளை எல்லாம் தவிர்க்க, இப்பகுதியில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றி, கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீமநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி