ஆப்நகரம்

போதையில் கிணற்றில் விழுந்த வாலிபர்கள்; பகல் முழுவதும் காத்திருந்த கிக் நண்பர்கள்!

திருச்சி மாவட்டத்தில் போதையில் கிணற்றில் விழுந்து போராடிய 2 இளைஞர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, மது பிரியர்கள் மத்தியில் நகைச்சுவையையும் ஏற்படுத்தியது.

Samayam Tamil 2 Aug 2021, 3:30 pm
திருச்சி மாவட்டம், துறையூர் பெரிய ஏரியில் உள்ள கிணற்றின் மீது உள்ள கட்டையில் நேற்று மாலை பெரியகடைவீதி முருகேசன் என்பவரது மகன் சதீஷ் (28), வடக்கு தெரு, ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (23) ஆகிய இருவரும் தனது நண்பர்களுடன் மதுபோதையில் பேசிக்கொண்டு இருந்தனர்.
Samayam Tamil போதை வாலிபர்கள் மீட்கப்படுகின்றனர்
போதை வாலிபர்கள் மீட்கப்படுகின்றனர்


அப்பொழுது எதிர்பாராவிதமாக சதீஷ் தவறி கிணற்றில் விழுந்துவிட்டார். அவரை காப்பாற்ற ராஜசேகரும் கிணற்றில் குதித்ததார். இருவருக்கும் நீச்சல் தெரிந்ததால் நீரில் முழுகாமல் இருந்துள்ளனர்.

அவர்களின் நண்பர்களான சோனி, தேவா ஆகிய இருவரும் கிணற்றில் விழுந்தவர்கள் மோட்டார் பைப்பை பிடித்து ஏறி விடுவார்கள் என்று காத்துக்கொண்டு இருந்ததனர். ஆனால் இரவு ஆகியும் மேலே ஏறி வரவில்லை.

தகவலறிந்த துறையூர் தீயணைப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், 100 அடி அகலமும், 130 அடி ஆழமும் உள்ள கிணற்றில் சுமார் 30 அடி நீரில் தத்தளித்து ,உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷ் , ராஜசேேகர் ஆகிய 2 இளைஞர்களை உயிருடன் மீட்டனர்.

அண்ணா கிட்ட செல்லும் ‘கருணாநிதி’; உடன் பிறப்பு போஸ்டரில் வித்தியாசம்!

கிணற்றில் விழுந்த வாலிபர்களை சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட துறையூர் தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

அடுத்த செய்தி