ஆப்நகரம்

காந்தி மார்க்கெட் மூடல்: தணியாத பதற்றம் 50 பேர் மீது வழக்கு!

திருச்சி மாவட்டத்தில் காந்திமார்கெட் மூடப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், வியாபாரிகள் 50பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 13 Apr 2021, 10:50 am
கொரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுப்பதற்காகத் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் சில்லறை வியாபாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பெரும்பாலான கதவுகள் மூடப்பட்டிருந்தன.
Samayam Tamil காந்தி மார்க்கெட் மூடல்: தணியாத பதற்றம் 50 பேர் மீது வழக்கு!


மார்க்கெட்டிற்குள் நுழைய பொது மக்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. சில்லறை வியாபாரிகள் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் வியாபாரம் நடத்தச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்குச் சில்லறை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள் காந்தி மார்க்கெட் 6ஆவது கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

மணல் கடத்தல்காரர்களுக்கு திருச்சி எஸ்பி வார்னிங்!

இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கமலக்கண்ணன் உள்பட 50 வியாபாரிகள் மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அடுத்த செய்தி