ஆப்நகரம்

முஸ்லிம் என்பதால் காதலில் மதம் பிரச்சினையா?: வாலிபர் சடலமாக மீட்பு!

திருச்சியில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டினுள் தனது அறையில் சடலமாகத் தூக்கு கயிற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். நன்கு சம்பாதித்து வந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

Samayam Tamil 8 Jan 2021, 4:49 pm
திருச்சி கோரிமேட்டில் வசித்து வருபவர் காஜா மைதீன். இவர் மகன் ஆரோன் பாஷா. வயது 26. சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.
Samayam Tamil முஸ்லிம் என்பதால் காதலில் மதம் பிரச்சினையா?: வாலிபர் சடலமாக மீட்பு!
முஸ்லிம் என்பதால் காதலில் மதம் பிரச்சினையா?: வாலிபர் சடலமாக மீட்பு!


வீட்டிற்கு வந்த பாஷா சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார். அதன்பின் காலை விடிந்த பிறகும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. அதேவேளை அறையிலிருந்து எந்த அசைவும் உணரப்படவில்லை.

இதையடுத்து குடும்பத்தார் அறையை உடைத்து சென்று பார்த்தபோது பாஷா உடல் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளது. அதிர்ந்துபோன பாஷாவின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து பாலகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பாலகரை போலீசார், ஆரோன் பாஷா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பாஷாவின் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலையாக இருக்கும் எனச் சந்தேகிக்கின்றனர். அதேவேளைத் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டிராக்டர் பிரச்சினை, தாயை கையால் அடித்து கொன்ற மகன்கள்!

தொழில் ரீதியாகப் பிரச்சினையா அல்லது காதலில் ஏற்பட்ட பிரிவு காரணமா என்ற கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே பாஷா உயிரிழப்பு காதல் பிரச்சினை காரணமாக நிகழ்ந்துள்ளது என சில தகவல்கள் கூறுகின்றன.

இஸ்லாமியர் என்பதில் தொடங்கி இந்தப் பிரச்சினை உருவெடுத்திருக்கும் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த செய்தி திருச்சி மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி