ஆப்நகரம்

திருச்சி: கல்லூரி மாணவர்கள் திறந்த நேர்மையின் கடை

திருச்சி கருமண்டபத்தில் கல்லூரி மாணவர்கள் சார்பில் நேர்மையின் கடை திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Feb 2021, 2:47 pm
Samayam Tamil Honesty Shop

திருச்சியில் நூற்றாண்டுகள் பாரம்பரியமிக்க கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரியில் புதுவித முயற்சியாக நேர்மை கடை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக நேர்மை என்பதை சிறு வயதிலேயே விதைக்கும் வகையில் "Honesty Shop" நேர்மை கடை‌ ஒன்றை கல்லூரி வளாகத்திற்குள்ளேயே உருவாக்கியுள்ளனர். இந்த நேர்மையின் கடையில் எழுதுபொருட்கள், பேனா மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி தேசிய கல்லூரி மற்றும்‌ JCI அமைப்பின் சார்பாக கல்லூரி இனி வரும் காலங்களில் இந்த நேர்மையின் கடை செயல்பட இருப்பதாகவும், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாங்களாகவே வந்து பணத்தை அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு தங்களுக்கு உரிய பொருள்களை எடுத்துச் செல்லலாம் என தெரிவித்தனர்.

சூயஸ் குடிநீர் திட்டம் மிகநல்ல திட்டம்: அதிமுக கல்யாணசுந்தரம் பேட்டி

இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன் "நேர்மையின் அடையாளமாக திறக்கப்பட்டுள்ள இந்த நேர்மை மார்க்கெட் இனி வரும் காலங்களில் தொடர்ந்து செயல்படும் என்றும், சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் கடந்த இரண்டு பர்சுகளை மாணவர்களுக்கு என்னிடம் எடுத்து வந்து கொடுத்தனர். இதன் மூலமாகத்தான் இந்த நேர்மையின் கடை திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்"

அடுத்த செய்தி