ஆப்நகரம்

சபரிமலைக்குப் போக முடியலையா? இங்க வாங்க

திருச்சி கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோவிலில் சிறப்பு நெய் அபிஷேகம்

Samayam Tamil 30 Nov 2020, 9:51 am
சபரிமலைக்குச் செல்ல முடியாவிட்டால், திருச்சி ஐயப்ப சேவா சங்கம் ஐயப்பன் கோயிலில் நெய் அபிஷேகம் செய்யலாம் என்று ஐயப்ப சேவா சங்கம் அறிவித்துள்ளது.
Samayam Tamil திருச்சி ஐயப்ப சேவா சங்கம்


திருச்சி ஸ்ரீ ஐயப்ப சேவ சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கொரோனா ஊரடங்கு காரணமாக சபரி மலைக்கு இருமுடி கட்டி சென்று நெய் அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் கோர்ட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு வந்து நெய் அபிஷேகத்துக்கு கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.

தரிசனம் நேரம்: காலை மணி 07:10 முதல் 10:00 மணி வரை. மாலை மணி 06:00 முதல் 08:00 மணி வரை,
இருமுடியிலிருந்து சேகரித்த நெய்யும் தனியாக பக்தர்கள் கொடுக்கும் நெய்யும் பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய் பிரசாதமாக வழங்கப்படும்.

அழகான மனைவி, அன்பான குடும்பம், 20 நாளில் நாசமான வாழ்க்கை

அரசாங்கம் அறிவித்துள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தலும், முகக்கவசம் அணிதலும் மிக அவசியம், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உள்ளே செல்ல இயலாது.

நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.”

அடுத்த செய்தி