ஆப்நகரம்

கல்லணை நீர் நிலவரம்...விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி!

கல்லணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் இரடிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 7 Nov 2020, 8:52 am
காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்கு மேட்டூர் அணை நீர் எந்தளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு கல்லணை நீரும் முக்கியமாக உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகமாகியுள்ளது.
Samayam Tamil கல்லணை
கல்லணை -இன்றைய நிலவரம்


இதன் காரணமாக, அணையில் இருந்து சீரான இடைவெளியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கல்லணையில் இருந்து வினாடிக்கு 21.529 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் 7,901 கன அடியும், வெண்ணாற்றில் 7,053 கன அடியும் , கொள்ளிடத்தில் 3 , 004 கன அடியும், கல்லணை கால்வாயில் 3,111 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கோயில் வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள்... அசத்தல் திட்டத்தை தொடங்கினார் கலெக்டர்!

மேட்டூர் அணையை போன்று, கல்லணையிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது டெல்டா மாவட்ட விவசாயிகளை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி