ஆப்நகரம்

கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு விற்பனை தீவிரம்.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்குக் கைகொடுத்த கார்த்திகை தீபம்

Samayam Tamil 29 Nov 2020, 6:18 pm
கார்த்திக்கை தீபத்திற்க்கு இன்று இரவு கொண்டாட உள்ள நிலையில் ஆண்டாள் வீதி, காந்தி மார்க்கெட் பகுதிகளில் அகல் விளக்கு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.
Samayam Tamil karthigai deepam helped pottery workers in good sales
கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு விற்பனை தீவிரம்.


ஒரு மாதகாலத் தயாரிப்பு:

திருச்சியில் கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் திருகார்த்திகை நாளில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர்.


தீபத்தையொட்டி மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிப்பு பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தனர்

குறிப்பிடத்தக்க பகுதிகள்

திருச்சி கொண்டையம்பேட்டை , லால்குடி உள்ளிட்ட பகுதியில் களிமண் மூலமாக அகல்விளக்கு தயாரிக்கும் பணிகள் நடந்தது. சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான விளக்குகளை மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்துள்ளனர்.

ரூ.10 முதல் 600 வரை:

இந்நிலையில், திருக்கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி ஆண்டாள் வீதி பகுதியில் அகல்விளக்கு விற்பனை மும்மரமாக நடந்து வருகிறது. சிறிய அளவிலான 4 அகல் விளக்குகள் ரூ.10-க்கும், இலை வடிவிலான விளக்குகள் ஜோடி ரூ.10-க்கும் 10 ரூ முதல் 600 ரூபாய் வரை விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விலை அதிகம்:

அதே சமயம், வீடுகளின் வாசல்களில் தொங்கவிடும் வகையில் சிறிய அளவிலான விளக்குகள், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம் கொண்ட விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு விளக்குள் விலை சற்று உயர்வாக உள்ளது என மக்கள் கூறினர்.

அடுத்த செய்தி