ஆப்நகரம்

திருச்சி: வீட்டுக்கே வரும் காய்கறி, பழங்கள்... அமைச்சர் நேரு தொடக்கினார்!

தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Samayam Tamil 24 May 2021, 5:19 pm
தமிழ்நாட்டில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததை அடுத்துத் தளர்வில்லா ஊரடங்கு இன்று முதல் தமிழக அரசு அமல்படுத்தியது.
Samayam Tamil திருச்சி: வீட்டுக்கே வரும் காய்கறி, பழங்கள்... அமைச்சர் நேரு தொடக்கினார்!


இதன் ஒரு பகுதியாகப் பொதுமக்களுக்கு வேண்டிய காய்கறிகளை நடமாடும் வாகனம் மூலம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி உள்ள 65வார்டுகளிலும் அத்தியாவசிய காய்கறிகள், பழங்கள் விற்பனையைத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு துவக்கி வைத்தார்.

மோடி, அமித் ஷாவை காணவில்லை: எம்பி ஜோதிமணி கடும் தாக்கு!
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 535 வாகனங்களும், புறநகர்ப் பகுதிகளுக்கு 500 வாகனங்களும் இயக்கப்பட உள்ளது. மேலும் வார்டு ஒன்றுக்கு ஐந்து வாகனம் என்ற எண்ணிக்கையில் விற்பனை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி பழனியாண்டி, தலைமை பொறியாளர் அமுதவல்லி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி