ஆப்நகரம்

இன்னும் ஒரு மாசம் ஆகுமாம் ஆக்சிஜன் திருச்சில தயாராக: அமைச்சர் நேரு பதில்!

திருச்சியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பைத் தொடங்க ஒரு மாதம் நேரமெடுக்கும் என மாநில அமைச்சர் கேஎன் நேரு நிருபர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 16 May 2021, 11:54 pm
திருச்சி கருமண்டபம் பகுதியில் கொரோனா தோற்று நோய் அதிகம் பாதித்த பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாகக் கள ஆய்வு மேற்கொள்ளக் கொள்ளும் வகையிலும், நோய் கண்டறிய உதவும் நோக்கில் நோயாளிகளுக்கு முதற்கட்டமான மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
Samayam Tamil இன்னும் ஒரு மாசம் ஆகுமாம் ஆக்சிஜன் திருச்சில தயாராக: அமைச்சர் நேரு பதில்!


இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது களப்பணி அளவிற்கு மருத்துவ தொகுப்பை வழங்கிய அமைச்சர் கேஎன் நேரு, தொடர்ந்து பேசுகையில்:
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி அரசு மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சில பகுதிகளிலும் சிகிச்சை மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டும்தான் இருக்கிறது. ஆக்சிசன் உற்பத்தி செய்வது தொடர்பாக பெல் நிறுவனத்திடம் கேட்ட போது நாங்களே வெளியிலிருந்துதான் ஆக்சிஜன் வாங்கி வருகிறோம் எனத் தெரிவித்தார்கள்.

2-ஏ பேரு ரூ. 2 லட்சம் குவாட்டர் பாட்டில்: திருச்சியை அதிரவிட்ட ஊரடங்கு வழக்கு!

அவர்களிடம், உடனே நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்றுவது ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தேவையான நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவித்தோம். இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி