ஆப்நகரம்

காவிரி வழியாக வெளியேற்றும் நீர் குறைந்தது: திருச்சி முக்கொம்பு இன்றைய நிலவரம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேல் அணையில் இரண்டு நாட்களில் நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளது, இதை மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.

Samayam Tamil 24 Nov 2021, 3:11 pm
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 10 நாட்களாக சுமார் 60 ஆயிரத்து 700 கனஅடி வரை தண்ணீர் வரத்து இருந்து வந்தது. இதை அடுத்து தண்ணீர் வர வர அவை முழுவதுமாக கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
Samayam Tamil காவிரி வழியாக வெளியேற்றும் நீர் குறைந்தது: திருச்சி முக்கொம்பு இன்றைய நிலவரம்!


இன்று காலை நிலவரப்படி மேல் அணைக்கு சுமார் 32 ஆயிரத்து 476 கன அடி நீர் வந்துக் கொண்டிருந்தது. பெரிய தொடர்ந்து மேல் அணையில் இருந்து இருந்து கொள்ளிடம் ஆற்றில் 22 ஆயிரத்து 650 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

அதன்படி காவிரி ஆற்றில் 6 ஆயிரத்து 681 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வடக்கு கொள்ளிட ஆற்றில் 3 ஆயிரத்து 145 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் முதல்வர் தரிசனம்: எதற்காக தெரியுமா?
பாசன வாய்க்கால்களான அய்யன் வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவனை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தண்ணீர் திறக்கப்படும் அளவு கடந்த இரண்டு நாட்களில் அளவு படிபடியாக குறைந்து வருகிறது.

முன்னதாக திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது இந்த எச்சரிக்கையிலிருந்து மக்கள் மீண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி