ஆப்நகரம்

இங்க போங்க... கொரோனாவ ஈசியா விரட்டிடலாம்!

கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் வசதிகளுடன்கூடிய மையம் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 May 2021, 2:04 pm

ஹைலைட்ஸ்:

  • கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்கம்.
  • அமைச்சர் நேரு மையத்தை துவக்கி வைத்தார்.
  • பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மையம் திறப்பு.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கொரோனா சித்த மருத்துவ மையம் திருச்சி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சித்த மருத்துவ மையம் தொடக்கம்
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில், 200 படுக்கை வசதியுடன்கூடிய கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ புத்துணர்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு இந்த மையத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'இந்த மையத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு தினமும் காலை கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை அளிக்கப்படும்.

களம் இறங்கியது திமுக; ஆளுநரிடம் முறையீடு

இத்துடன் வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, ஆவி பிடித்தல், யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற பயிற்சிகளுடன், மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படும்' என்று சித்த மருத்துவர் அலுவலர் காமராஜ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி