ஆப்நகரம்

மத்திய அரசு பென்ஷன் திட்டம் குறித்து ஆராய குழு அமைத்துள்ளது ஏமாற்று வேலை - எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க பொதுச்செயலாளர் பரபரப்பு பேட்டி!

மத்திய அரசு பென்சன் திட்டம் குறித்து ஆராய குழு அமைத்துள்ளது ஏமாற்று வேலை என‌ எஸ்.ஆர்.எம். யு பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டியளித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 3 Apr 2023, 8:27 pm

ஹைலைட்ஸ்:

  • மத்திய அரசு பென்சன் திட்டம் குறித்து ஆராய குழு அமைத்துள்ளது ஏமாற்று வேலை
  • 2024 ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு தான் இந்த குழுவானது அமைக்கப்பட்டுள்ளது
  • எஸ்.ஆர்.எம். யு பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க பொதுச்செயலாளர் பரபரப்பு பேட்டி
மத்திய அரசு பென்சன் திட்டம் குறித்து ஆராய குழு அமைத்துள்ளது ஏமாற்று வேலை என‌ எஸ்.ஆர்.எம். யு பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டியளித்துள்ளார்.
எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம்:
எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா கூறியதாவது:
"ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை செய்து எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை செயல்படுத்தவில்லை.


ஆனால் நேரடியாக தனியார் பயத்தை மேற்கொள்ளாமல் மறைமுகமாக பல நடவடிக்கைகள் மூலம் தனியார் மயம் என்கிற பெயரை மாற்றி தனியார்மயத்தை மேற்கொள்கிறார்கள். அதன் காரணமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை கேள்விக்குறியாகும் நிலை வருங்காலத்தில் உருவாகும்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம். அதன்படி தற்பொழுது பென்ஷன் திட்டம் குறித்து ஆராய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு ஒரு ஏமாற்று வேலை புதிய பென்ஷன் திட்டத்தை ஒருபோதும் ரத்து செய்ய மாட்டோம் என அவர்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் தெரிவித்து விட்டார்கள்.

தமிழர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம் - திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்!

ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக கோரிக்கைகளை வெவ்வேறு வடிவங்களில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எங்கள் அகில இந்திய சங்கத்தின் சார்பில் 47 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தோம். அதனடிப்படையில் தான் தற்பொழுது பென்ஷன் குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளார்கள். ஆனால் அந்த குழு என்பது ஏமாற்று வேலை. 2024 ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு தான் இந்த குழுவானது அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி