ஆப்நகரம்

அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் அறிவிப்பு!

கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 29 May 2022, 6:11 am
திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு முடிவுகளை குறித்து பொதுச்செயலாளர் மயில் விளக்க உரையாற்றினார். இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ஆரோக்கியராஜ், கணேசன் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil tamil nadu primary school teachers announce hunger strike against karur district chief educational officer
அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் அறிவிப்பு!


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச்செயலாளர் மயில் கூறியதாவது: -
"கரூர் மாவட்டம் குளித்தலை கடவூர் ஒன்றியத்தில் ஆசிரியர் ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்தார்கள். அதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சார்பில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டங்கள் காரணமாக அந்த ஆசிரியரின் பணிநீக்கம் கரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 7 நபர்களை கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் குளித்தலை கல்வி அதிகாரி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஜனநாயகத்தின் குரலை பறிப்பதாக உள்ளது.

தொடக்கக்கல்வி துறையில் மாறுதல் கலந்தாய்வு இன்றும் நடைபெறாமல் இருக்கிறது.இதை உடனடியாக நடத்த வேண்டும். கடந்த பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இவர்களுக்கு ஊதியம் வழங்கிட தொடக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை என்பது மாணவனின் நலனுக்கு எதிரானது. இதில் வளாக பள்ளி என்ற திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் மூலம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவர். தொடக்கக் கல்வித்துறையில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர் நியமனம் செய்யப்படாமல் இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் மூன்றாம் மொழி என்பது மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம் அது திணிக்கக்கூடாது” என தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவிட்டால் மே 30-ம் தேதி முதல் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மயில் தெரிவித்தார்.

அடுத்த செய்தி