ஆப்நகரம்

6 வருட தேடலுக்கு பயன்… திருச்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் நிகழ்ந்த கண்ணீர் காவியம்!

திருச்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்த கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்போது நினைவு திரும்பிய நிலையில் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Samayam Tamil 19 Jan 2022, 4:25 pm
தமிழ்நாட்டில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சாலையோரத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றோரை மீட்க உத்தரவிட்டார்.
Samayam Tamil trichy news


அதன்படி மாவட்டத்தில் உள்ள பகுதியில் சாலையோரத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 19 பேரை மீட்டு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதில், திருவெறும்பூர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மனநலம் பாதித்த பெண் ஒருவர் திருச்சி தெப்பகுளம் ஆதரவற்றோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 7 மாதங்களாக மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் அண்மையில் தெளிவுற்ற அவர் தனது பெயர் விஜயா(47) என்றும் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் தனது மகள் மற்றும் மகன் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
என்னை சந்தித்தவர்கள் ஜாக்கிரதை; அமைச்சர் அதிரடி தகவல்!

இதையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தின் உரிமையாளர் மற்றும் திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் யசோதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வாரங்கல் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு அவரது மகள் மாதவி, மகன் சாய்குமார் ஆகியோரை திருச்சி வரவழைத்து விஜயாவை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

அப்போது விஜயா தனது பிள்ளைகளை கண்டதும் கண்ணீர் மல்க ஆரத்தழுவி கட்டி அணைத்து கொண்டார். இது குறித்து விஜயாவின் மகள் மாதவி கூறுகையில். எனது தாய் கடத்த 6 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனார். அவரை பத்திரமாக மீட்டு பாதுகாத்து எங்களிடம் ஒப்படைக்க திருச்சி மாவட்ட போலீசாருக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

அடுத்த செய்தி