ஆப்நகரம்

Mahalaya Amavasya: திருச்சி ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்!

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

Samayam Tamil 25 Sep 2022, 10:35 am
அமாவாசை நன்னாளில் மாதம் தோறும் முன்னோர்களை நினைத்து அவர்களை வழிபடுவது பன் நெடுங்காலமாக நாம் கடை பிடித்து வரும் வழக்கம். அதேபோல் வருடத்தில் ஒரு நாள் அவர்களுக்கு திதி கொடுப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு.
Samayam Tamil Mahalaya Amavasya


அந்த வகையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள். ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை விட வருடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அமாவாசையாக புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அம்மாவாசை பார்க்கப்படுகிறது.

இதில், திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கூடி வாழை இலை, தேங்காய் பழம் உள்ளிட்ட பொருட்களுடன் முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு பசுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவார்கள்.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறைகளில் இன்று அதிகாலை முதலே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதனால், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மாம்பழ சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி