ஆப்நகரம்

துறையூரில் உருவான குப்பை மலை... துர்நாற்றத்தால் மக்கள் அவதி!

தூய்மை நகரங்கள் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட 2016-ம் ஆண்டில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த திருச்சி மாநகராட்சியின் கீழ் செயல்படும் துறையூரில் இது போன்ற அவலம் இருப்பது வருத்தத்தையும் வேதணையும் தருகிறது என சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 29 Jun 2022, 11:43 am

ஹைலைட்ஸ்:

  • துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானா முதல் பெரம்பலூர் பைபாஸ் ரோடு
  • 100 மீட்டரில் குப்பை மலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது
  • அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil குப்பை மலை
குப்பை மலை
திருச்சி மாவட்டம், துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானா முதல் பெரம்பலூர் பைபாஸ் ரோட்டில் அடுத்து ஒரு 100 மீட்டரில் குப்பை மலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் அடங்கிய மலை காற்று வீசப்பட்டதால் காற்று வீசியதில் குப்பைகள் 100 மீட்டர் ரேடியஸ் அளவிற்கு காற்றில் பரவி செல்கிறது .
சென்னை , விழுப்புரம், திண்டிவனம் , பெரம்பலூர் செல்பவர்களும், கரூர் , நாமக்கல் , திருப்பூர் , காங்கயம் , கோயம்புத்தூர் , மேட்டுப்பாளையம் , ஊட்டி , தாராபுரம் , பழனி செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காலை, மாலையில் துறையூர் வாசிகள் இந்த சாலையில் நடைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலையில் தோன்றிய திடீர் குப்பை மலையில் பிளாஸ்டிக் கவர்கள் , அழுகிய பொருட்கள் , இறைச்சி கழிவுகள் , கடை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

திருச்சி அதிமுக செய்த சம்பவம்... குஷியில் எடப்பாடியார்!

இந்த சாலையில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பரவுவதால் மற்றும் வீசுகின்ற துர்நாற்றத்தினால் அங்கே வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். தங்களது வீட்டு வாசலில் வந்தோ அல்லது வீட்டின் மாடிக்கு வந்தோ தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வீசுகின்ற துர்நாற்ற காற்றை சுவாசித்தால் அங்கே வாழும் மக்கள் நோய்வாய்ப்படவும் மற்றும் சாலையில் பயணிக்கும் மக்கள் நோய்வாய்ப்படைய அதிக வாய்ப்பு உள்ளது .

குப்பைகள் கொட்டப்படுவதால் நில மாசுப்பாடு ஏற்படுகிறது . அங்கே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை சாப்பிட அங்கே பன்றிகளும் நாய்களும் 24 மணி நேரமும் குடியிருக்கிறது. இவை சாலையை திடீரென கடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்து அதிகரிக்கிறது. உதாரணமாக நடந்த நிகழ்விற்கான ஒரு சான்று : இந்த சாலைகளில் தெரு விளக்குகள் போன்ற எந்த வசதியும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் இரவு நேரத்தில் பயணித்த இரு சக்கர வாகன ஓட்டி வரும் பொழுது
திடீரென்று ஒரு பன்றி சாலையின் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த விபத்தில் அவருக்கு முகங்களில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல் போடப்பட்டுள்ளது . மேலும் மூன்று பற்கள் விழுந்து கொடிய காயத்தை ஏற்படுத்தியது. இங்கே குப்பைகள் கொட்டப்படுவதால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்தவண்ணம் இருக்கிறது. இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க அங்கே குப்பைகளை கொட்டுவதை அனுமதிக்க கூடாது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி