ஆப்நகரம்

அதிமுகவை 24 மணி நேரமும் குறை சொல்லும் திருச்சி அமைச்சர்!

எடப்பாடியும் பன்னீர்செல்வமும் முறையாக கால்வாய்களை கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் கட்டி இருந்தால் தூர்வாரி இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி அளித்து உள்ளார்.

Samayam Tamil 29 Nov 2021, 1:09 pm
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 481 குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் தமிழ்நாடு நகர்புறவளர்ச்சி துறை அமைச்சர் கேஎன் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
Samayam Tamil அதிமுகவை 24 மணி நேரமும் குறை சொல்லும் திருச்சி அமைச்சர்!


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கேஎன் நேரு கூறியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு எங்களை விட சிறப்பாக யாரும் செய்ய முடியாது. இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற இலங்கை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்த மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும்.

பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வழக்கு போடுகின்றனர் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் குற்றம்சாட்டுகிறார். ஆட்சியில் இருக்கும் போது சில சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை. அரசு எதை செய்ய முடியுமோ அதைதான் சட்ட ரீதியாக செய்துள்ளோம். முதல்வர்தான் இதன் மீது நடவடிக்கை எடுப்பார்.

பத்தாண்டு காலமாக ஆட்சி செய்த அதிமுக முதல்வர்கள் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் முறையாக ஒழுங்காக கால்வாய்களை கட்டி இருந்தால், வெட்டி இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சினை இல்லை.

200 வருடத்தில் 4 ஆவது முறையாக 100 செமீ மழை பெய்துள்ளது. முதல்வர் நேரடியாக சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன கல்வி அமைச்சர்!
தண்ணீர் தேங்குவதற்கான காரணம் என்ன? எந்த இடத்தில் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்பதனை ஆய்வு செய்து அடுத்த ஓராண்டில் அதனை முழுமையாக சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ வாட்டர் பைப்புகளை மாற்ற சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே குறை கூறுவதிலாவது அவர்கள் ஒன்றிணைந்து கூறுவது என்பது சரிதான்.

திண்டுக்கல் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக திருச்சி அரியாறு மற்றும் கோறையாற்றில் அதிகபடியான நீர் தேங்கி உள்ளது. இது குறித்து பொது பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கணக்கிடு செய்து வருகிறார்கள், எனவே உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி