ஆப்நகரம்

திருச்சி: இரண்டாவது நாளாக தொடரும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மத்திய பேருந்து நிலையம் அருகே மாற்றுத் திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 10 Feb 2021, 12:43 pm
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.
Samayam Tamil மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தமிழக அரசால் வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகையான ரூ 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஊனமுற்றவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை 5000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் 5 சதவீதம் ஒதுக்கி அது சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர்.

Chennai drug: 20 ரூபாய் ஏஜெண்ட்டுகள்... போதையில் 40 லட்சம் பள்ளி மாணவர்கள்

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அடுத்த செய்தி