ஆப்நகரம்

மர்ம நபர்கள் ரயிலை கவிழ்க்க சதியா.? திருச்சி எஸ்பி நேரில் விசாரணை

திருச்சி லால்குடி அருகே வாளாடி ரயில் தண்டபாளத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் லாரி பெயர்களை வீசி சென்றுள்ளனர். அந்த விவகாரம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 3 Jun 2023, 7:04 pm

ஹைலைட்ஸ்:

  • திருச்சியில் ரயிலை கவிழ்க்க சதி
  • ரயில் தண்டவாளத்திற்கு நடுவே லாரி டயர்கள்
  • சம்பவ இடத்தில் எஸ்பி விசாரணை
  • மர்ம நபர்களுக்கு தேடுதல் வேட்டை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருச்சி ரயில் விபத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு வண்டி எண் 12643 என்ற ரயில் கிளம்பியுள்ளது. அந்த ரயிலானது திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு வந்த நிலையில் சரியாக 12.30 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டது.
பிச்சாண்டையார் கோயில் ரயில் நிலையம் தாண்டி வாளாடி ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது யாரோ மர்ம நபர்கள் அந்த தண்டபாளத்தில் நடுவே இரண்டு பெரிய லாரி டயர்களை போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதி வேகத்தில் சென்ற அந்த ரயில் டயரில் மீது ஏறியதில் ரயிலின் சக்கரத்தில் சிக்கி அந்தப் பகுதியிலேயே ரயில் நின்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனால் ரயிலின் குழாய் ஓரிடத்தில் பழுதடைந்தது. நள்ளிரவு சுமார் 1.05 மணி அளவில் நிறுத்தப்பட்ட ரயில் 1.45 மணிக்கு சரி செய்யப்பட்டு 40 நிமிடங்கள் தாமதமாக கிளம்பியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அப்பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் விசாரணை மேற்கொண்டார்.



ஏற்கனவே கடந்த 31 ஆம் தேதி மேலவாளடி ரயில் தண்டவாளம் அருகே பாலத்தின் கீழே சாலை பணி செய்வதற்காக ஜேசிபி மூலம் குழி தோண்டி உள்ளனர். தற்போது மணலுக்கு அடியில் இருந்த ரயில்வே டிராக் சிக்னல் கேபிள் பழுதடைந்ததால் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை. அது குறித்தும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அடையாளம் தெரியாத ஜேசிபி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கிடப்பில் போடப்பட்ட பணியால் அடிக்கடி அசம்பாவிதம் - ராமநாதபுரத்தினர் கடும் அதிருப்தி

அதன் தொடர்ச்சியாக மேல வாளடியைச் சேர்ந்த 4 நபர்கள் ரயில்வே காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் அந்த நபர்களுக்கு தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதனை அடுத்து இன்று சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டவாளத்தில் லாரி டயர்களை வீசி சென்ற மர்ம நபர்களுக்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி