ஆப்நகரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்-சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பல்வேறு விதமான சிகிச்சை பெற நோயாளிகள் வருகின்றனர், ஸ்கேன் கருவி இல்லாததால் நோயாளிகள் பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே அதிநவீன கருவிகளுடன் மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரிடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக மற்றும் மாற்றம் அமைப்பினர் மனு அளித்தனர்.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 18 May 2023, 10:39 am

ஹைலைட்ஸ்:

  • திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பல்வேறு விதமான சிகிச்சை பெற நோயாளிகள் வருகின்றனர்
  • ஸ்கேன் கருவி இல்லாததால் நோயாளிகள் பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது
  • திருச்சி அரசு மருத்துவமனையை அதிநவீன கருவிகளுடன் மேம்படுத்த வேண்டும்
  • மருத்துவமனைகளில் அதிக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும்
  • சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Trichy
Trichy
திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காத்திருக்கும் கூடம், சிறப்பு வார்டு ரூபாய் நான்கு கோடி மற்றும் அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் 75 லட்சம் ரூபாய் மற்றும் பட்டீஸ்வரன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு 22.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை...சென்னை மக்களுக்கு குட்நியூஸ்
சுகாதாரத்துறை அமைச்சர்
இதற்காக வருகை தந்த தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

அதிநவீன கருவிகள்

அப்போது திருச்சி அரசு மருத்துவமனை மணப்பாறை ஸ்ரீரங்கம் மருத்துவமனைகளில் அதிநவீன கருவிகள் மற்றும் மேம்படுத்தபட்ட நவின சிகிச்சை வசதிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில்,

அரசு மருத்துவமனை

திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மத்திய பகுதி ஆகும். திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பல்வேறு விதமான சிகிச்சை பெற நோயாளிகள் புறநகர் நகர் பகுதி, நகர பகுதி மற்றும் பல்வேறு கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள் மற்றும் பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

அதி நவீன ஸ்கேன் கருவி
இவர்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய பதிவு செய்து பிறகு தேதி குறிபிட்ட நாளில் மீண்டும் வந்து ஸ்கேன் செய்யும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இன்னொரு அதி நவீன ஸ்கேன் கருவி அரசு அமைத்து தரவேண்டும்.
அதிக மருத்துவர்கள்
மேலும் இதுபோன்ற அதி நவின ஸ்கேன் கருவிகளை ஸ்ரீரங்கம் மணப்பாறை மருத்துவமனைகளில் அரசு அமைத்து கொடுத்தால் அது திருச்சி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதுபோன்று மருத்துவமனைகளில் அதிக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாத பிரதோஷம்-அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை
நடவடிக்கை
இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி