ஆப்நகரம்

நெஞ்சு வலி என நீதிபதியை ஏமாற்றித் தப்பி ஓடிய நெல்லை கைதி!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஹைகிரவுண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Samayam Tamil 19 Apr 2021, 9:15 am
நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனம் விற்பது தொடர்பாக இளைஞர் ஒருவரைக் கடத்தியதாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
Samayam Tamil நெஞ்சு வலி என நீதிபதியை ஏமாற்றித் தப்பி ஓடிய நெல்லை கைதி!


இந்த சூழலில் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாகப் பாளையங்கோட்டை மனக்காவளம் பிள்ளை நகர்ப் பகுதியைச் சேர்ந்த உதேஸ் ராஜ்(19) உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து நீதிபதி முன் கடந்த 2 தினங்களுக்கு முன் முன்னிறுத்தினர்.

அப்போது குற்றம்சாட்டப்பட்ட உதேஸ்ராஜ் நீதிபதியிடம் தனக்கு நெஞ்சு வலிப்பது போன்று உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதேஸ்ராஜ்ஜை தவிர்த்து பிறரைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து உதேஸ்ராஜ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலிருந்து உதேஸ்ராஜ் தப்பிச் சென்றுள்ளார்.

வாக்கு எண்ணும் மையம் அருகே மர்ம கண்டெய்னர்

இது சம்பந்தமாகப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் அளித்த தகவல்படி ஹைகிரவுண்ட் போலீசார் கைதி தப்பியோடிய சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்புடன் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் நெல்லை மாநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாநகர பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி