ஆப்நகரம்

குடி போதையில் வாகனம் ஓட்டி விபத்து: வேற லெவல் நிபந்தனை விதித்து ஜாமீன்!

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு வித்தியாசமான நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 7 Mar 2023, 9:04 am
நெல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்கு தினமும் இரவு 12 மணிக்கு டாஸ்மாக்கை சுத்தம் செய்ய வேண்டும் என நூதமான முறையில் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Nellai Court


நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம். இவருக்கு வயது 28. கடந்த மாதம் 12ஆம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனம் ஒட்டி மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தி அதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீர் காத்தலிங்கத்தை கைது செய்தனர்.
‘உனக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் உயிரே’ - ஜாக்குலினுக்கு கிரிமினல் கடிதம்.!
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது. இரண்டாவது முறையாக நீர் காத்தலிங்கம் ஜாமீன கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் முன்னிலையில் நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீர்க்காத்த லிங்கத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
உடையும் அதிமுக - பாஜக கூட்டணி..? ஈபிஎஸ் 'ஐ டோன்ட் கேர்'.. புலம்பும் நிர்வாகிகள்..
அந்த உத்தரவில் நீர் காத்தலிங்கம் தினமும் நள்ளிரவு 12 மணிக்கு நெல்லை டவுன் அருகே உள்ள குறுக்குத்துறை டாஸ்மாக் மதுபான கடையை சுத்தம் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். நீர் காத்தலிங்கம் செய்யும் பணியினை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி