ஆப்நகரம்

நெல்லையப்பர் கோயில் கார்த்திகை தீபம்

சன்னதி முன்பு வைக்கப்படும் மஹா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Samayam Tamil 29 Nov 2020, 12:43 pm
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பரணி மஹா தீபம் கோவில் மஹா மண்டபத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Samayam Tamil Nellaiappar temple tower


நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முந்தைய நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி மஹா தீபம் ஏற்றப்படும் அதன் படி சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .

அதன்பின் மஹா ஹோமங்கள் செய்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்துவரப்பட்டு பரணி மஹா தீபம் ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

எல்லையில் வம்பு பண்ணும் பாகிஸ்தான்; பகீர் செய்தி சொல்லும் ராணுவத் தளபதி!

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நாளைய தினம் இந்த பரணி மஹா தீபம் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு வைக்கப்படும் மஹா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி