ஆப்நகரம்

நெல்லையில் ஊருக்குள் உலாவிய கரடி; ஒரு மாதத்திற்கு பின் கூண்டில் சிக்கியது... பொதுமக்கள் நிம்மதி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஊருக்குள் தைரியமாக உலாவி வந்த கரடி இன்று காலை கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Curated byரம்யா. S | Samayam Tamil 31 May 2023, 2:04 pm

ஹைலைட்ஸ்:

  • கிராமத்திற்குள் புகுந்த கரடி
  • கரடி உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
  • கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைப்பு
  • கூண்டில் சிக்கிய கரடி
  • நிம்மதி அடைந்த பொதுமக்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கிராமத்திற்குள் புகுந்த கரடி
நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் பெருமாள்குளம் அருகே உள்ள கோயில் பொத்தைகளில் தஞ்சமடைந்து உணவு மற்றும் குடிநீருக்காக கிராமத்திற்குள் புகுந்து வந்தது.

ஊருக்குள் உலா வரும் கரடி

கடந்த 2ம் தேதி அதிகாலை அங்குள்ள இசக்கியம்மன் கோவிலில் கரடி உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கிராம மக்கள் அச்சம்

இதனை அடுத்து ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து களக்காடு வனத்துறையினர் கரடி நடமாட்டம் காணப்படும் பெருமாள்குளத்தில் கோயிலின் அருகே கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைத்தனர்.
நெல்லை அருகே பயங்கரம்; நகை வியாபாரியிடம் மிளகாய் பொடி தூவி 1.5 கோடி பணம் கொள்ளை...!
கூண்டுக்குள் சிக்கிய கரடி

கூண்டுக்குள் கரடி விரும்பி உண்ணும், அண்ணாசி பழங்களை வைத்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி சிக்கியது.

பொதுமக்கள் நிம்மதி

இதனை அடுத்து மீண்டும் அதனை வனத்துறையினர் காட்டில் விட முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக கரடி பயத்தால் பொதுமக்கள் மிகவும் பீதியில் காணப்பட்ட நிலையில் கரடி பிடிபட்டதால் என்று பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
ரம்யா. S
நான் ரம்யா தமிழ் இலக்கியம் கற்றுள்ளேன். ஊடகம் மீதான ஆர்வத்தால் இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இரண்டு வருடம் பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளது. ஊடகம் சார்ந்த எனது பார்வையை விரிவுபடுத்தி அதில் அனுபவம் பெரும் நோக்கோடு தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் இணைந்துள்ளேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி