ஆப்நகரம்

கைது செய்... கைது செய்... வலுக்கும் கல்லறை உடைப்பு விவகாரம்

ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனை முடிந்து வெளியில் வந்த கிறிஸ்தவ மக்கள், இந்த செய்தி அறிந்து ஆத்திரமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆலயப் பங்குத்தந்தை ஜோமிக்ஸ் தலைமையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் போராடத் தொடங்கினர்.

Samayam Tamil 18 Oct 2020, 1:17 pm
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ல மணிமூர்த்திஸ்வரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து அங்குள்ள கல்லறை சுற்றுச்சுவர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

எதிரில் இருக்கும் பழமை வாய்ந்த கணபதி கோவில் தரப்புக்கும், இந்த கல்லறைத் தோட்டப் பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்துள்ள நிலையில், இன்று கல்லறைத் தோட்டம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லறைத்தோட்டம் நெல்லை உடையார்பட்டி திருஇருதய ஆலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் ஆகும் . இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனை முடிந்து வெளியில் வந்த கிறிஸ்தவ மக்கள், இந்த செய்தி அறிந்து ஆத்திரமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆலயப் பங்குத்தந்தை ஜோமிக்ஸ் தலைமையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் போராடத் தொடங்கினர்.

கோயிலுக்கு எதிரில் கல்லறைத் தோட்டமா? அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்


கல்லறையை இடித்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய கல்லறையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் நெல்லை –மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக போலீசார் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர் . இனதால் அந்த பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி