ஆப்நகரம்

கொரோனாவிற்கு பலியான ஆயுதப்படை காவலர்; நெல்லையில் இரங்கல்!

ஆயுதப்படை காவலர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில் அவருக்கு இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Samayam Tamil 13 Jul 2020, 4:40 pm
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சாது சிதம்பரம். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 15 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சக காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் சாது சிதம்பரத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெல்லை மாநகர் காவல்துறை சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாளையங்கோட்டையில் கொரோனா பரவல் அதிகரிப்பு: கடைகள் அடைப்பு!

இதில் மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது மறைந்த ஆய்வாளர் படத்திற்கு மலர் தூவி தீபக் தாமோர் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து காவல் துணை ஆணையர் சரவணன், பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்களும் அஞ்சலி செலுத்தினர். கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வாகன ஓட்டியிடம் அத்துமீறிய போலீஸ்: ஓர் ஆண்டுக்கு பின் வழக்குப்பதிவு

இதையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவது வேதனையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அடுத்த செய்தி