ஆப்நகரம்

ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கன்ஃபார்ம்... நெல்லையில் பீதியை கிளப்பும் கொரோனா!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது நெல்லை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Apr 2021, 12:43 pm

ஹைலைட்ஸ்:

  • நெல்லை மாவட்டத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது.
  • பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நெல்லையில் கொரோனா அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 யை தாண்டியுள்ளது.
இதனையடுத்து கொரோனா பரவலை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். நெல்லை பேட்டை பகுதியில் உள்ள செந்தமிழ் நகரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் பொது முடக்கம் இல்லையா? தமிழக அரசின் முடிவு இதுதான்!

அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளவும், தொற்றின் தீவிரத்தை பொறுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி